உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரத்தில் மகிஷாசுரனை வதம் செய்த பர்வதவர்த்தினி அம்மன்

ராமேஸ்வரத்தில் மகிஷாசுரனை வதம் செய்த பர்வதவர்த்தினி அம்மன்

ராமேஸ்வரம், :விஜயதசமியில் ராமேஸ்வரம் கோயில் இருந்து பர்வத வர்த்தினி அம்மன் புறப்பாடாகி மகிஷா சுரனை வதம் செய்தார்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் செப்.,28ல் பர்வதவர்த்தினி அம்மனுக்கு  காப்பு கட்டி நவராத்திரி விழா துவங்கியது. தொடர்ந்து 9 நாட்கள் அம்மன்  சன்னதியில் அன்னபூரணி, மகா லெட்சுமி, சிவதுர்க்கை உள்ளிட்ட 9  அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை யடுத்து நேற்று  8ம் தேதி விஜயதசமி யொட்டி கோயிலில் இருந்து பல்லக்கில் பர்வத வர்த்தினி அம்மன் புறப்பாடாகி, வன்னி நோன்பு திடலில்வந்தடைந்தார்.

பின் இரவு 7:00 மணிக்கு அம்மன் அம்பு எய்து மகிஷாசுரனை வதம் செய்யும்  நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. கோயில்  இணை ஆணையர் கல்யாணி, கோயில் ஊழியர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள்  தரிசனம் செய்தனர்.

பர்வதவர்த்தினி அம்மன் கோயிலில் இருந்து புறப்பாடாகியதும் மாலை 5:00  முதல்இரவு 8:00 மணி வரை கோயில் நடை அடைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !