உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோபி ஆதிநாராயண பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம்

கோபி ஆதிநாராயண பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம்

கோபி: கோபி, பாரியூர் கொண்டத்துகாளியம்மன் கோவில் வகையறா,  ஆதிநாராயண பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவம் விழா வாஸ்து சாந்தியுடன்  இன்று அக்., 10ல் துவங்குகிறது. அக்.,11ல், கொடியேற்றம், ஊஞ்சல் சேவை, 12ல்  திருக்கல்யாண உற்சவம், தீபாராதனை, யாகசாலை நித்ய ஹோமம், 13ல் மகா  சுதர்சன ஹோமம், 14ல் கொடியிறக்கம் நடக்கிறது.

பிரம்மோற்சவத்துக்காக, பெருமாள் கோவில் வளாகத்தில், யாகசாலை தயார் செய்யும் பணி நேற்று 9ம் தேதி நடந்தது. ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் நாகராஜ், உதவி கமிஷனர் நந்தக்குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !