உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரிஷபம் (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் 1,2) -செலவில் கண் வையுங்க! 60/100

ரிஷபம் (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் 1,2) -செலவில் கண் வையுங்க! 60/100

சாதுர்யமாகச் செயல்பட்டு  சாதனை படைக்கும் ரிஷபராசி அன்பர்களே!

புத்தாண்டில் பிரதான கிரகங்களில் சனிபகவான் மட்டுமே புரட்டாசி முதல் பங்குனி வரை (செப்டம்பர்- மார்ச்) நற்பலன்களை அள்ளி வழங்கும் வகையில் செயல்படுகிறார். ஆனால், மற்ற கிரகங்களான குரு, கேது, ராகுவின் அமர்வால் சங்கடமான அனுபவத்தைப் பெறுவீர்கள். எந்த விஷயத்தையும் குழப்பமான மனதுடன் அணுகுவீர்கள். புத்திரர் ஆவணி (ஆகஸ்ட்) மாதம் வரை மந்தகதியிலும் பின் சுறுசுறுப்பான வகையிலும் செயல்படுவர். பூர்வ சொத்தின் மூலம் ஆண்டின் தொடக்கத்தில் குறைவான வருமானமும் புரட்டாசி (செப்டம்பர்) முதல் ராகு கேது பெயர்ச்சியால் அதிக வருமானமும் கிடைக்கும். இஷ்டதெய்வ வழிபாட்டால் வாழ்வில் நன்மை அதிகரிக்கும். எதிரிகளின் மறைமுகத் தொல்லைகளுக்கு தக்க பதிலடி கொடுக்க முயற்சிப்பீர்கள். உடல்நலம் சீராக இருக்க சத்தான உணவுப்பழக்கம், தகுந்த ஓய்வுமுறையைப் பின்பற்றுவது நல்லது. விலைமதிப்பு மிக்க பொருட்களை இரவல் கொடுக்க, வாங்கக்கூடாது. தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செயல்படுவர். குடும்பச் செலவு நாளுக்கு நாள் அதிகரிக்கும். சிக்கனம் மிக அவசியம். நண்பர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு நீங்கி நட்பு மலரும். தொழில் சார்ந்த வகையில் குறுக்கிடும் சிரமங்களைச் சரிசெய்வதில் அக்கறை தேவைப்படும்.

தொழிலதிபர்கள்:  தொழிலில் வளர்ச்சி இலக்குகளை எட்டுவதில் பல்வேறு குறுக்கீடுகளை எதிர்கொள்வர். முறையான மாற்றுத்திட்டங்களை செயல்படுத்துவதால் மட்டுமே வளர்ச்சி சீராகும். நிர்வாகச்செலவு அதிகரிக்கும். சக தொழில் சார்ந்த எவருக்கும் பணப்பொறுப்பு ஏற்கக்கூடாது. தொழில் கூட்டமைப்பில் கிடைக்கிற பதவி, பொறுப்பால் சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.

வியாபாரிகள்:  வியாபாரத்தில் மறைமுகப் போட்டியை எதிர்கொள்வர். லாபவிகிதம் சுமாராக இருக்கும். சலுகைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வியாபாரத்தைத் தக்கவைப்பர். கூடுமானவரை ரொக்கத்திற்கு விற்பது நல்லது. விரிவாக்க முயற்சி இப்போதைக்கு கூடாது.

பணியாளர்கள்: பணியாளர்கள் தயக்க மனதுடன் சுதந்திரம் இல்லாமல் பணியாற்றுவர். பணி இலக்கு நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். நிர்வாகத்தின் கண்டிப்பு, ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரலாம். பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்கள் பொறுமை காக்க வேண்டியதிருக்கும். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் கவனக்குறைவால் சிரமத்திற்கு ஆளாவர். சிலருக்கு விரும்பாத பணியிடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் பணி இடங்களில் குளறுபடியான சூழ்நிலையை எதிர்கொள்வர். பணி நிறைவேற்றுவதில் கவனம் கொள்வதால் மட்டுமே பணி இலக்கு குறித்தகாலத்தில் நிறைவேறும். பதவி உயர்வு, சலுகைப்பயன் பெறுவதில் தாமதம் இருக்கும். குடும்ப பெண்கள் கணவரின் கருத்துக்களை மதித்து நடப்பர். ஆடம்பர பணச்செலவு குறைப்பதால் கடன் நெருக்கடி குறையும். வரவுக்கேற்ப செலவைத் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. இரவல் நகை கொடுக்க, வாங்கக்கூடாது. சுயதொழில் புரியும் பெண்கள் புதிய நடைமுறைகளை பின்பற்றினால் மட்டுமே வளர்ச்சி சீராக இருக்கும். பாக்கி வசூலிக்க கடின முயற்சி தேவைப்படும்.

மாணவர்கள்: படிப்பில் இருந்து வரும் கவனக்குறைவை மாணவர்கள் சரிசெய்து கொள்வது நல்லது. படிப்புக்கான செலவை மட்டும் பெற்றோரிடம் எதிர்பார்க்க வேண்டும். ஆடம்பரச்செலவு கூடாது. இரவல் வாங்கிய பொருள் காணாமல் போக வாய்ப்பு உள்ளது. அலைச்சல், வெளியூர் பயணம் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.

அரசியல்வாதிகள்: சமூகப்பணி செய்வதில் ஆர்வம் குறையும். ஆதரவாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள பணம் தேவைப்படும். அரசு அதிகாரிகளிடம் வைத்த கோரிக்கை நிறைவேற்ற கடின முயற்சி தேவைப்படும். பொறுமையைக் கடைபிடித்தால் மட்டுமே கடந்த கால நற்பெயரை தக்கவைக்க முடியும். எதிரியால் வருகிற தொல்லை வருட பிற்பகுதியில் சரியாகும்.

விவசாயிகள்: விடாமுயற்சியுடன் உழைத்து மகசூலைப் பெருக்க முயற்சிப்பர். செலவு அதிகரித்தாலும் விலைபொருள்களுக்கு தகுந்த விலை கிடைக்காமல் போகலாம் கவனம். கால்நடைவளர்ப்பினால் கிடைக்கிற வருமானம் குடும்பத் தேவையைப் பூர்த்தி செய்யும். நிலம் தொடர்பான பிரச்னை இருந்தால் வருட பிற்பகுதியில் சரியாகும்.

பரிகாரம்: லட்சுமியை வழிபடுவதால் குடும்பத்தேவைக்கானவருமானம் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !