உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடகம் (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) - மனதில் சந்தோஷம் 70/100

கடகம் (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) - மனதில் சந்தோஷம் 70/100

பிறருக்கு உதவும் மனம் கொண்ட கடகராசி அன்பர்களே!

புத்தாண்டில் பிரதான கிரகங்களில் குருபகவான் வருடம் முழுவதும் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் அமர்ந்து சிறப்பான ஆதாய பலன்களை வழங்குகிறார். சனிபகவான் சித்திரை முதல் ஆவணி வரை(ஏப்ரல்-ஆகஸ்ட்) தன் பங்கிற்கு நல்ல பலன் தருகிறார். ராகு மாறுபட்ட குணத்துடன் செயல்படவும், கேது நற்பலன் தரவும் காத்திருக்கின்றனர். எதையும் விவேகத்துடன் செயல்படுத்துவீர்கள். குடும்ப வளர்ச்சிக்கான விஷயங்களுக்கு முன்னுரிமை தருவீர்கள். மனதில் சந்தோஷம் நிலைத்திருக்கும்.  ஆவணியில்(ஆகஸ்ட்) வரும் சனிபகவானின் வக்ர நிவர்த்திக்குப் பிறகு கண்டச்சனி என்ற நிலை உருவாகும். இதுகாலம் துவங்கி வருடம் முழுவதும் வாகன பயணத்தில் மிதவேகத்தைப் பின்பற்றுவது அவசியம். தாயின் தேவையை நிறைவேற்றி அவரது ஆசியை பெறுவீர்கள். புத்திரர் கார்த்திகையில்(டிசம்பர்) வரும் ராகு, கேது பெயர்ச்சிக்குப் பின் செயலில் சுறுசுறுப்பும் புத்திசாலித்தனமும் காண்பர். உடல்நலம் சீராக இருப்பதற்கான பயிற்சிகளைப் பின்பற்றுவது அவசியம். கடன் தொந்தரவு ஓரளவு சரியாகும். தம்பதியர் ஒருவர் நலனில் ஒருவர் அக்கறையுடன் நடந்து கொள்வர். தொழில் சார்ந்த வகையில் வளர்ச்சிக்கான வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்வீர்கள். பணவரவு திருப்தி தரும். வருட முற்பகுதியில் எதிர்பாராத வகையில் கணிசமான பணவரவு கிடைக்க வாய்ப்புண்டு. குடும்பத்தில் திட்டமிட்டபடி மங்கல நிகழ்ச்சி நடந்தேறும்.

தொழிலதிபர்கள்:  தொழிலில் வளர்ச்சியை உருவாக்க முனைப்புடன் செயலாற்றுவீர்கள். முதலீட்டை அதிகரித்து உற்பத்தியைப் பெருக்குவர். தரம் சிறந்து விளங்குவதால் புதிய ஒப்பந்தம் கிடைக்கப்பெறுவர்.

வியாபாரிகள்:  சந்தையில் உருவாகிற போட்டியை சாதுர்யத்துடன் சமாளித்து விற்பனையில் முன்னேற்றம் காண்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். புதிய கிளை துவங்குவதற்கான முயற்சி நிறைவேறும். சரக்கு வாகன வகையில் ஓரளவு வருமானம் கிடைக்கும்.

பணியாளர்கள்: பணியாளர்கள் புதிய தொழில்நுட்பத்தை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவர். பணி இலக்கை எளிதில் நிறைவேற்றி முடிப்பர். பதவி உயர்வு, எதிர்பார்த்த சலுகைப்பயன் கிடைக்கும். சக பணியாளர்களின் ஆலோசனையைக் கேட்டுப் பின்பற்றுவர். பணியில் திறமையை வெளிப்படுத்தி நிர்வாகத்திடம் பாராட்டு காண்பர்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் பணியிடத்தில் தங்களின் திறமையை வெளிப்படுத்துவர். விரும்பிய பணி, இடமாற்றம் கிடைக்கும். தாமதித்து வந்த சலுகைப்பயன் எளிதாக கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின் பாசம் கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர். ஆடை, ஆபரணச் சேர்க்கை அவரவர் வசதிக்கு ஏற்ப கிடைக்கும். உறவினர் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை தலைமையேற்று நடத்துவீர்கள். சுயதொழில் புரியும் பெண்கள் மூலதனத்தை அதிகரித்து அபிவிருத்திப்பணியை மேற்கொள்வர்.

மாணவர்கள்:  மாணவர்கள் பாடங்களை எளிதில் புரிந்து கொண்டு மனதில் பதித்துக் கொள்வர். எதிர்பார்த்த தரதேர்ச்சி உயர்ந்த அளவில் கிடைக்கும். சக மாணவர்களிடம் குறை காண்பது, சுயபெருமை பேசுவது ஆகிய செயல்களை தவிர்ப்பது நல்லது. புரட்டாசி முதல் பங்குனி வரை (செப்டம்பர்-மார்ச்) வாகன பயணங்களில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது.

அரசியல்வாதிகள்:  உங்களின் அரசியல்பணிக்கு உரிய அங்கீகாரம் நல்லவர்களின் உதவியால் கிடைக்கும். புதிய பதவி பொறுப்பின் மூலம் ஆதரவாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எதிரியால் இருந்த தொல்லை குறையும். பொது விவகாரங்களில் அதிகார சிந்தனை விடுத்து இரக்க குணத்துடன் செயல்படுவது நல்லது. வாகனபயணத்தின் போது சாலை விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவது அவசியம்.

விவசாயிகள்:  விவசாயப்பணி சிறந்து பயிர் மகசூல் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பில் பராமரிப்பு செலவு கூடும். கூடுதல் நிலம் வாங்கும் முயற்சி வெற்றி பெறும். நிலப்பிரச்னையில் இருந்து விடுபட்டு மனநிம்மதி காண்பர்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் வீட்டில் சுபநிகழ்ச்சி இனிதாக நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !