சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1) - கவனமாக இருக்கலாமே! 60/100
எண்ணத்திலும் செயலிலும் உறுதி நிறைந்த சிம்மராசி அன்பர்களே!
புத்தாண்டில், பிரதான கிரகங்களில் சனிபகவான் வக்ர நிவர்த்தியாகி புரட்டாசி முதல் (செப்டம்பர்)வருடம் முழுவதும் மிகச்சிறந்த பலன்களை வழங்குகிறார். ராகுபகவான் கார்த்திகை மாதம் (டிசம்பர்) பெயர்ச்சியாகி நட்பு கிரகமான சனியுடன் துலாம் வீட்டில் அனுகூலமாக அமர்வு பெறுகிறார். குரு, கேது மாறுபட்ட பலன்களை தரும் இடங்களில் உள்ளனர். பேச்சில் இருந்த கண்டிப்பு குணம் மாறி விவேகமும் சாந்தமும் அதிகரிக்கும்.பால் பாக்யம், பணச்சேர்க்கை பெறுகிற யோகம் உண்டு. தைரிய செயல் புரிந்து புகழ் பெறுவீர்கள். வீடு, வாகனத்தில் கிடைக்கிற வசதியை அளவுடன் பயன்படுத்துவீர்கள். தாய்வழி உறவினர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு சரியாகும். புத்திரர்கள் படிப்பு, செயல்பாடுகளில் கவனம் தேவை. பூர்வ சொத்தில் வருமானம் பெறுபவர்கள் வருமானத்தை முழுமையாக வீடு கொண்டுவந்து சேர்க்க கண்காணிப்பு அவசியம். புதிய சொத்துக்களை வாங்க ஏற்கனவே உள்ள சொத்தின் பேரில் கடன் பெறுவீர்கள். உடல்நலம் குருவருளாலும்,ராகுவின் பார்வை விலகலாலும் சரியாகும். தம்பதியர் ஒருவருக்கொருவர் அன்புடன் நடந்து குடும்பப் பெருமை, நற்பெயர் காத்திடுவர். நண்பர்கள் உற்ற துணையாக இருந்து முக்கிய தருணங்களில் உதவுவர். மூத்த சகோதரர்களின் தேவையை நிறைவேற்ற தேவையான பங்களிப்பை தருவீர்கள். வெளியூர் பயணங்களில் முன்னேற்பாடு, பாதுகாப்பு நடைமுறைகளை அக்கறையுடன் பின்பற்ற வேண்டும்.
தொழிலதிபர்கள்: நிர்வாகிகளின் செயல்பாடுகளை நன்றாகக் கவனித்து ஆலோசனையுடன் வழிநடத்த வேண்டும். உற்பத்தி இலக்கை அடைய அதிக முயற்சி தேவைப்படும். தொழில் கூட்ட மைப்புகளில் உரிய கவுரவமும், பதவிப்பொறுப்பும் கிடைக்கும். நண்பர்களுடன் கூட்டு சேர்வதற்கான வாய்ப்பு தேடி வரும். பரிசீலித்து ஏற்பது நல்லது.
பணியாளர்கள்: பணியாளர்கள் அதிக பணிச்சுமைக்கு உட்படுவர். சிலருக்கு பணியிட மாற்றம், காத்திருப்பு பட்டியலில் இடம்பெறுவது ஆகிய எதிர்மறை பலன்கள் ஏற்படலாம். செலவில் சிக்கனம் பின்பற்றுவதால் கடன்சுமை வராமல் தவிர்க்கலாம். சலுகைகள் குறைவதால் குடும்ப செலவுகளுக்கு கடன் பெறுகிற நிலைமை ஏற்படும். சக பணியாளர்களுடன் கருத்துபேதம் கொள்ளாத அளவிற்கு அனுசரணையுடன் பேசுவது நல்லது. சிலருக்கு புதிய நிறுவனங்களில் பணிவாய்ப்பு கிடைக்கும்.
வியாபாரிகள்: போட்டி குறைந்தாலும் விற்பனையை அதிகப்படுத்த சற்று சிரமமே. அளவான லாபம் கிடைக்கும். மாற்று வியாபாரத்தில் ஈடுபட மனதில் சிந்தனை உருவாகும். இதைத் தவிர்த்து, தற்போதைய விற்பனையில் கவனம் செலுத்தினாலே வளர்ச்சியும் தாராள பணவரவும் கிடைக்கும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் பணி இலக்கு நிறைவேற்றுவதில் சுணக்கமான சூழ்நிலையை எதிர்கொள்வர். நிர்வாகத்தினரின் கண்டிப்பினால் மனச்சோர்வு ஏற்படலாம். குடும்பப் பெண்கள் கணவரின் வாழ்வியல் நடைமுறைகளுக்கு உதவுகிற வகையில் செயல்படுவர். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் வளரும். தாய்வழி சீர்முறை பெறுவதில் தாமதம் ஏற்படும். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான உற்பத்தி, சுமாரான விற்பனை என்கிற நிலையை அடைவர். எவருக்கும் பணப்பொறுப்பு ஏற்கக்கூடாது.
மாணவர்கள்: மாணவர்கள் படிப்பில் தகுந்த கவனம் கொண்டு தேர்ச்சியில் முன்னேற்றம் காண்பர். ஆசிரியரின் பாராட்டு கிடைக்கும். படிப்பைத்தவிர பிற தேவைகளுக்கான செலவை குறைப்பது நல்லது. சக மாணவர்களிடம் இருந்த மனக்கிலேசம் விலக அன்பு மனப்பான்மையுடன் நடந்துகொள்வீர்கள்.
அரசியல்வாதிகள்: அரசியல்பணியில் ஆர்வம் இருந்தாலும் சொந்த தேவைகளை நிறைவேற்றுவதில் முக்கியத்துவம் தருவீர்கள். ஆதரவாளர்களிடம் பெற்ற நற்பெயர் மனதிற்கு தெம்பைத்தரும். அரசு அதிகாரிகள் உங்கள் கோரிக்கை நிறைவேற உதவுவர். எதிரிகள் உருவாக்குகிற அவதூறு பலமிழந்து போகும்.
விவசாயிகள்: செலவு அதிகரிக்கும். அளவான மகசூல் உண்டு. கால்நடை வளர்ப்பின் மீதான ஆர்வம் குறையும். சொத்து வாங்கினால் வில்லங்கம் பார்த்து கவனித்து வாங்கவும்.
பரிகாரம்: பைரவரை வழிபடுவதால் வாழ்வில் துன்பம் குறைந்து நன்மை ஏற்ப்படும்.