விருச்சிகம் (விசாகம் 4, அனுஷம், கேட்டை) - எல்லாம் சுகமே 75/100
தன்னம்பிக்கையுடன் செயல்படும் விருச்சிகராசி அன்பர்களே!
புத்தாண்டில் பிரதான கிரகங்களில் குருபகவான் வருடம் முழுவதும் சிறந்த நற்பலன்களை வழங்குகிறார். சனிபகவான் ஆவணி (ஆகஸ்ட்) வரையிலும், கேது கார்த்திகை முதல் பங்குனி வரையிலும்(டிசம்பர்-மார்ச்) தன் பங்கிற்கு ஆதாய பலன்களைத் தருவர். மனதில் உற்சாகம் மேலோங்கும். புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு எதிலும் முன்னேற்றம் காண்பீர்கள். வாழ்வில் எல்லா நிலைகளிலும் சுகம் பெறுவீர்கள். புதிய முயற்சிகளை வெற்றிகரமாகச் செயல்படுத்தி தாராள பணவரவு பெறுவீர்கள். பேச்சில் ஆன்மிகம் கலந்திருக்கும். நல்லவர்களின் ஆதரவு கிடைக்கும். தம்பி, தங்கை வகையில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு. புத்திரர்களின் செயல்பாடு கண்டு பெருமிதம் காண்பீர்கள். இஷ்ட, குலதெய்வ வழிபாடு சிறப்பாக நடத்துவீர்கள். எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க முயற்சிப்பீர்கள். இதன்மூலம் பணவிரயம் ஏற்பட வாய்ப்புண்டு. உடல்நலம் வருட முற்பகுதியில் சுமாராகவும் ராகு கேது பெயர்ச்சிக்கு பின் நல்ல விதமாகவும் மாறும். குடும்பத்தினர் தேவை அனைத்தும் பெருமளவில் நிறைவேறும். தம்பதியர் ஒருவர் கருத்தை ஒருவர் மதித்து நடந்துகொள்வதால் குடும்பஒற்றுமை சிறக்கும். நண்பர்களின் ஆலோசனை கேட்டு முதலில் தயங்கினாலும்பின்னர்ஏற்றுக் கொள்வீர்கள். தொழில் சிறந்து விளங்குவதால், எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ராசிக்கு ஏழில் குரு அமர்ந்து ராசியில் குருபார்வை பதிவதால் திருமண முயற்சி கைகூடும்.
தொழிலதிபர்கள்: தொழிலில் சுறுசுறுப்புடன் செயல்பட்டு அமோக முன்னேற்றத்தைக் காண்பர். உற்பத்திப் பொருளின் தரம் உயரும். தொழிலாளர் ஒத்துழைப்பு கிடைக்கும். பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்பதன் மூலம் வளர்ச்சி ஏற்படும். வருட துவக்கத்தில் சுற்றுலா பயணத்திட்டம் நிறைவேறும்.
வியாபாரிகள்: புதிய வாடிக்கையாளர்களை பெறும் நோக்கத்தில் வியாபாரிகள் சலுகைத் திட்டங்களை செயல்படுத்துவர். விற்பனை சிறந்து எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கப் பெறுவர். விரிவாக்க முயற்சியில் வெற்றி கிடைக்கும். வியாபார விஷயமாக அடிக்கடி வெளியூர்பயணம் செல்ல நேரிடும்.
பணியாளர்கள்: பணியாளர்கள் புதிய தொழில்நுட்பத்தை அறிந்து கொள்வதில் ஆர்வம் கொள்வர். நிலுவைப்பணியை குறித்த காலத்தில் நிறைவேற்றி நிர்வாகத்தினரிடம் நற்பெயர் பெறுவர். பதவி உயர்வு, எதிர்பார்த்த சலுகைகள் ஒவ்வொன்றாக கிடைக்கும். சக பணியாளர்கள் மத்தியில் செல்வாக்கு காண்பர். சுதந்திர உணர்வுடன் செயல்பட்டு வருவர்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் புதிய பயிற்சிமுறையை பின்பற்றி பணிக்கு சிறப்பு சேர்த்திடுவர். எதிர்பார்த்த சலுகைப்பயன் கிடைக்கும். கடந்த காலத்தில் இருந்து வந்த குழப்பம் அனைத்தும் நீங்கும். குடும்ப பெண்கள் கணவரின் ஆலோசனை, சீரான பணவசதி கிடைத்து நல்வாழ்வு நடத்துவர். ஆடை, ஆபரணச் சேர்க்கை அவரவர் வசதிக்கேற்ப கிடைக்கும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் உதவியால் உற்பத்தியின் அளவை உயர்த்துவர்.
மாணவர்கள்: மாணவர்கள் ஆசிரியருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் நன்கு படிப்பர். கல்விக்கான அனைத்து வசதிகளும் சீராகக் கிடைக்கும். படிப்புக்கான உதவித்தொகை எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். படித்து முடித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சக நண்பர்களுடன் கூட்டுமுயற்சியில் ஈடுபடுவர். அரசியல்வாதிகள்: அரசியலுக்கு உங்களை அறிமுகப்படுத்தியவரின் பெயருக்கு புகழ் சேர்க்கும் விதத்தில் நடப்பீர்கள். ஆதரவாளர்களின் மத்தியில் நம்பிக்கை மிக்கவராகத் திகழ்வீர்கள். அரசு தொடர்பான விஷயங்களில் அனுகூலம் காண்பர். புதிய பதவி எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். எதிரி தரும் மறைமுகப் போட்டிக்கு தக்க பதிலடி கொடுப்பீர்கள்.
விவசாயிகள்: விவசாயப்பணி சிறக்க தேவையான வசதி அத்தனையும் கிடைக்கும். பயிர் மகசூல் சிறந்து தாராள பணவரவு கிடைக்கும். கால்நடை வளர்ப்பால் வருட முற்பகுதியில் நல்ல லாபம் உண்டு. நிலம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
பரிகாரம்: முருகப்பெருமானை வழிபடுவதால் தொழிலில் வளர்ச்சி பன்மடங்கு உண்டாகும்.