உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்யாண பிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோவிலில் திருமலையில் ஒரு நாள் வைபவம்

கல்யாண பிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோவிலில் திருமலையில் ஒரு நாள் வைபவம்

மோகனூர்: கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவிலில், திருமலையில் ஒரு நாள் வைபவ நிகழ்ச்சி, கோலாகலமாக நடந்தது.

மோகனூர் காவிரி கரையோரத்தில், பிரசித்தி பெற்ற கல்யாண பிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, சுவாமி, பத்மாவதி தாயாருடன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும், திருமலையில் ஒருநாள் வைபவம் என்ற சிறப்பு வழிபாடு, கோவிலில் கோலாகலமாக நடக்கிறது. அன்று திருமலையில், பெருமாளுக்கு, அதிகாலை முதல், இரவு வரை நடக்கும் சிறப்பு தரிசன பூஜைகள் அனைத்தும், இங்கு எழுந்தருளியுள்ள கல்யாண பிரசன்ன வெங்கடரமண பெருமாள் சுவாமிக்கு நடத்தப்படும். அதன்படி, இந்தாண்டு விழா நேற்று காலை, 5:00 மணிக்கு கோ தரிசனத்துடன் துவங்கியது. 6:00 மணிக்கு நவநீதி ஆரத்தி, 7:00 மணிக்கு தோமாலை சேவை, 8:15 மணிக்கு அர்ச்சனை சேவை நடந்தது. 9:45 மணிக்கு வாரி சர்வ சமர்ப்பணம், உற்சவர் விசஷே திருமஞ்சன சேவை, மாலை, 4:00 மணிக்கு திருக்கல்யாணம், 6:00 மணிக்கு வாகன சேவை, இரவு, 9:00 மணிக்கு ஏகாந்த சேவை சிறப்பாக நடந்தது. நேற்று, திருப்பதி வெங்கடாஜலபதியை சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலில் தரிசித்தனர்.

* மோகனூர் அடுத்த, மணப்பள்ளி வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு, சுவாமி, பூதேவி, ஸ்ரீதேவிக்கு சிறப்பு அபி ?ஷகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் சேய்தனர். வரும், 16 மாலை, 6:15 மணி முதல், 7:30 மணி வரை, 1,008 சகஸ்ர நாம பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !