தட்சிண திருப்பதி கோவிலில் துளசி லட்சார்ச்சனை பூஜை
ADDED :2186 days ago
ஓசூர்: கோபசந்திரம் தட்சிண திருப்பதி கோவிலில், துளசி லட்சார்ச்சனை பூஜை நேற்று நடந்தது. ஓசூர் அடுத்த கோபசந்திரத்தில், தட்சிண திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இங்கு, தமிழ்நாடு பிராமணர் அசோசியஷேன் சார்பில், புரட்டாசி கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, உற்சவமூர்த்திக்கு துளசி லட்சார்ச்சனை பூஜை நேற்று நடந்தது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மங்களார்த்தி மற்றும் பிரசாத வினியோகம் ஆகிவை நடந்தன. தொடர்ந்து, துளசி லட்சார்ச்சனை பூஜை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, ஓசூர் பிராமணர் அசோசியஷேன் செய்திருந்தது.