இறைவனை உணர உதவும் உருவ வழிபாடு
ADDED :2186 days ago
மதுரை: மதுரை பெசன்ட்நகர் காஞ்சி காமகோடி பீடத்தில் மகா பெரியவர் மகிமை என்ற தலைப்பில் சொற்பொழிவாளர் கணேச சர்மாபேசியதாவது: தன்னை வணங்கினால் சந்தோஷப்பட்டு அருள்பவர் பரமேஸ்வரன். எனவே தான் அவர்கடவுள் என அழைக்கப்படுகிறார். தேவர்களை காப்பாற்ற ஆலகால விஷத்தை உண்ட போது பார்வதி,பரமேஸ்வரன் கழுத்தில் படிந்ததால் விஷம் கழுத்திலேயே தங்கியது. பொன்னார் மேனியான பரமேஸ்வரனின் கழுத்து பகுதி நீலநிறமாகி விட்டதால் நீலகண்டன் என அழைக்கப்படுகிறார். மின்சாரத்தை உபகரணம் கொண்டு உணர்வது போல இறைவனை உணர உருவ வழிபாடு உதவுகிறது. பிரதோஷத்தில் சிவனை வழிபடுவது கூடுதல் சிறப்பு தரும் என்றார். ஏற்பாடுகளை ஸ்ரீமடம் நிர்வாகிகள் ராமசுப்பிரமணியன், கிருஷ்ணமூர்த்தி, ராதாகிருஷ்ணன் செய்தனர். பொருளாளர் குமார் நன்றி கூறினார்.