உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருட புராணம் பற்றி தெரியுமா?

கருட புராணம் பற்றி தெரியுமா?

பதினெட்டு புராணங்களில் ஒன்றான கருடபுராணத்தை எழுதியவர் வியாசர். பெயரைச் சொன்னதும் மகாவிஷ்ணுவின் வாகனமான கருடனின் வரலாறு எனத் தோன்றும். ஆனால் இதில் மரணத்திற்குப் பின் உயிர்கள் எங்கே போகின்றன? சொர்க்கம், நரகம் இருக்கிறதா? அங்கே உயிர்களின் நிலை என்ன என்பது பற்றி விவரிப்பதே இந்நுால். அப்படியானால், கருடபுராணம் எனப்  பெயரிட்டது ஏன்? இது மகாவிஷ்ணுவால் கருடனுக்கு உபதேசம் செய்யப்பட்டது. கருடன் கேட்டதால் கருட புராணம் என பெயர் வந்தது. நைமிசாரம் காட்டில் வாழ்ந்த சூதமுனிவர் அங்கிருந்த முனிவர்களுக்கு இதை உபதேசித்தார். இறந்த உயிர் நற்கதி அடைய இதைப் படிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !