உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கிலி சந்தன கருப்பண்ண சுவாமி கத்திப்படி திருவிழா

சங்கிலி சந்தன கருப்பண்ண சுவாமி கத்திப்படி திருவிழா

விழுப்புரம்: விழுப்புரம், சித்தேரிக்கரை பகுதியில் உள்ள ஸ்ரீ பதினெட்டாம்படி சங்கிலி சந்தன கருப்பண்ண சுவாமிக்கு 18ம் ஆண்டு வெற்றிகொடி கத்திப்படி திருவிழா நடந்தது.

விழாவையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு, சங்கிலி சந்தன கருப்பண்ண சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை, பால் பொங்கல் வைத்து, ஆஞ்சநேயர் சுவாமி குளக்கரையில் இருந்து கரகம் ஜோடித்து வருதல், அகரம்பேட்டை ஓம்சக்தி கோவிலில் இருந்து 21 அரிவாளோடு, சந்தனகுடம், பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மாலை 3:00 மணிக்கு 108 அபிஷேகம், 21 அரிவாள்களுக்கும் அபிஷேகம்  நடந்தது. இரவு 8.00 மணிக்கு, 21 அடி உயரத்தில் 18 கத்திப்படி ஏறி அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !