உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமிர்தவள்ளி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

அமிர்தவள்ளி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த சின்னாண்டிக்குழி அமிர்தவள்ளி அம்மன் கோவிலில், பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவையொட்டி, அம்மன் மற்றும் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நேற்று முன்தினம் இரவு 8.00 மணிக்கு நடந்தது. இரவு 9.00 மணிக்கு அமிர்தவள்ளி அம்மன், முருகன், வள்ளி, தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு, கோவில் வலம் நடந்தது. இரவு 10.00 மணிக்கு, முருகன்,வள்ளி, தெய்வானை, விநாயகர், அமிர்தவள்ளி அம்மன் சுவாமிகளுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !