அஷ்டலட்சுமிகள் யார் யார்
ADDED :2282 days ago
பாற்கடலைக் கடைந்தபோது பிறந்தவள் லட்சுமி. கடலில் பிறந்ததால் அவளுக்கு அலைமகள் என்றொரு பெயருண்டு. அலைவீசும் கடலோரத்தில் அமைந்திருக்கும் திருவான்மியூரில் (சென்னை) அலைமகளுக்கு, அஷ்ட வடிவில் கோயில் கொண்டிருப்பது பொருத்தம். ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி ஆகிய எட்டு லட்சுமிகளும் தனித்தனி கருவறைகளில் இங்கு காட்சிதருகின்றனர். நடுவில் லட்சுமிநாராயணர் உள்ளார். பிரணவ மந்திரமான ஓங்காரநாதத்தை கடலலை எப்போதும் எழுப்பிக் கொண்டே இருக்கிறது. அம்மந்திரத்தில் லயித்தவர்களாக பெருமாளும், மகாலட்சுமியும் மணக்கோலத்தில் வீற்றிருக்கின்றனர்.