உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) குவா குவா சத்தம் குடும்பத்தில் ஒலிக்கும்

கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) குவா குவா சத்தம் குடும்பத்தில் ஒலிக்கும்

குருபகவான் இப்போது 11ம் இடமான தனுசு ராசிக்கு வருகிறார். இது சிறப்பான இடம். அவர் பலவிதத்தில் வெற்றியை தந்து பொருளாதாரத்தில் முன்னேறச் செய்வார். மேலும் அவரின் 5,7,9 ம் இடத்து பார்வைகள் சிறப்பாக உள்ளன. அதன் மூலம் பல்வேறு நன்மைகள் பெறலாம். ஆனால் அவர் 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை அதிசாரம் பெற்று மகர ராசியில் இருக்கிறார். இது சுமாரான இடம். அப்போது அவரால் தொல்லை உருவாகும். பணவிரயம் ஏற்படும். மன வருத்தம், வீண் அலைச்சல் ஏற்படும்

குடும்பத்தினர் உற்ற துணையாக இருப்பர். முன்னேற்றப் பாதையில் வெற்றி நடை போடுவீர்கள். குருவின் 7ம் இடத்துப் பார்வையால் எடுத்த முயற்சி வெற்றி பெறும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். புதுமணத் தம்பதியருக்கு குருவருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. தம்பதியிடையே அன்பு நீடிக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை வீண் விவாதங்களை தவிர்க்கவும். செலவு விஷயத்தில் கவனம் தேவை. சிலருக்கு குடும்பத்தில் வீணான குழப்பம் உருவாகலாம். இந்த காலகட்டத்தில் குரு சாதகமற்ற இடத்திற்கு சென்றாலும் கேது, சனி பகவானால் நற்பலன் கிடைக்கும். 2020 ஆகஸ்ட் 31க்கு பிறகு ராகு குடும்பத்தில் பிரச்னை ஏற்படுத்துவார். சிலரது வீட்டில் திருட்டு போகலாம். கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு வரலாம்.

தொழில், வியாபாரத்தில் பின்தங்கிய நிலை மறையும். புதிய தொழிலில் அனுகூலம் ஏற்படும். வணிக விஷயமாக வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை வியாபாரிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். இருப்பினும் சனி, கேதுவால் கூட்டாளிகளிடையே ஒற்றுமை நீடிக்கும். 2020 ஆகஸ்ட் 31க்கு பிறகு எதிரி தொல்லை ஏற்படும். பொருள் களவு ஏற்பட வாய்ப்புண்டு.

பணியாளர்கள் முன்னேற்றமான பலன் பெறுவர்.  சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும். குருவின் 9ம் இடத்துப் பார்வையால் உயர்வு காண்பர். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் நிறைவேறும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை  நற்பலனை எதிர்பார்க்க முடியாது. வேலைப்பளுவும், அலைச்சலும் இருக்கும்.  மேலதிகாரிகளிடம் அனுசரணையுடன் நடந்து கொள்ளவும். இருப்பினும் பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு  தடை இருக்காது.  வேலை விஷயமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரியும் நிலை உருவாகலாம்.  

கலைஞர்களுக்கு எதிரி தொல்லை, அவப்பெயர், போட்டிகள் முதலியன மறையும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.  ரசிகர்களின் மத்தியில் புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் நற்பெயர், பொருளாதார வளத்தைக் காண்பர். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை கலைஞர்களுக்கு விடாமுயற்சி தேவைப்படும்.  2020 ஆகஸ்ட் 31க்கு பிறகு அரசியல்வாதிகளுக்கு நிதானம், பொறுமை அவசியம்.

மாணவர்கள் கல்வியில் சிறப்பான இடம் பிடிப்பர். தேர்வில் அதிக மதிப்பெண், போட்டியில் வெற்றி கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பை பெறுவர். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை  சிரத்தையுடன் படிப்பது நல்லது. ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பது நல்லது.

விவசாயிகளுக்கு தொய்வு நிலை மாறும். பயறு வகைகள், நெல், மஞ்சள், கேழ்வரகு, கரும்பு, பனைத் தொழில் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்க யோகமுண்டு. கால்நடை வகையிலும் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பக்கத்து நிலத்துக்காரர்கள் வகையில் இருந்த தொல்லை மறையும். வழக்கு, விவகாரங்களில்  சாதகமான முடிவு கிடைக்கும்.  கைவிட்டு போன பொருள் மீண்டும் கிடைக்கும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை அதிக முதலீடு பிடிக்கும் பயிர்களை விவசாயம் செய்ய வேண்டாம்.  பெண்களுக்கு குடும்ப வாழ்வில் குதுாகலம் உண்டாகும்.  சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப் பெறலாம். சகோதரர்கள் ஆதரவுடன் இருப்பர். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் பதவி உயர்வு காண்பர். அதிகாரிகளின் கருணை பார்வை கிடைக்கும்.

அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி  கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.  2020 ஆகஸ்ட் 31க்கு பிறகு உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.

பரிகாரம்:
*  காளி அம்மனுக்கு  ராகு காலத்தில் எலுமிச்சை தீபம்
*  தேய்பிறை அஷ்டமியில் காலபைரவருக்கு அர்ச்சனை
*  சஷ்டியன்று முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !