விஸ்வ பிரம்மா ஜெயந்தி பெருவிழா
ADDED :2176 days ago
மலுமிச்சம்பட்டி: மலுமிச்சம்பட்டி, நாக சக்தி பீடம் சார்பில், விஸ்வ பிரம்மா ஜெயந்தி அவதார பெருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு, மலுமிச்சம்பட்டி நான்கு ரோடு சந்திப்பு அருகே, நாகசக்தி அம்மன் மலர் அலங்காரத்தில், வாகனத்தில் வைக்கப்பட்டு, ஊர்வலம் புறப்பட்டது.
நாகசக்தி பீடத்தின் சிவசண்முகசுந்தர பாபுசாமிகள், சிறப்பு பூஜை செய்தார். செட்டிபாளையம் ரோடு வழியாக, நாகசக்தி பீடத்தை சென்றடைந்தது.விஸ்வகர்மா ஆராதனை மற்றும் காமாட்சியம்மன், காயத்ரிதேவி ஆகியோருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. அனுமன்சேனா மாநில நிர்வாகி ராஜேந்திரன், கோவை தெற்கு மாவட்ட விஸ்வகர்மா சமூக நல சங்க செயலாளர் சந்திரன் உட்பட, நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.