பட்டிவீரன்பட்டியில் திருவாசகம் முற்றோதல்
ADDED :2178 days ago
பட்டிவீரன்பட்டி : அய்யம்பாளையத்தில் உலக நன்மைக்காக மங்களாம்பிகை சமேத ராஜராஜ சோலீஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நடந்தது. சிவனடியார் தாமோதரன் திருவாசக பாடல்களை இசைக் கலைஞர்களுடன் பாட, பக்தர்களும் சிவனடியார்களும் உடன் பாடினர்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட சிவனடியார்கள், சிவபக்தர்கள் திருவாசக முற்றோதலில் பங்கேற்றனர். திருவாசகத்தில் உள்ள ஐம்பத்தொரு பதிகங்களும் காலை முதல் மாலை வரை ஓதப்பட்டது. திருவாசகத்தின் மகிமையை தாமோதரன் விளக்கினார்.