உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் புனித தெரசம்மாள் ஆலய தேர்த் திருவிழா

கரூர் புனித தெரசம்மாள் ஆலய தேர்த் திருவிழா

கரூர்: கரூர் புனித தெரசம்மாள் ஆலயத்தின், 89வது ஆண்டு தேர்த்திருவிழா,  நேற்று (அக்., 20ல்) இரவு வாண வேடிக்கையுடன் நடந்தது. பிரசித்தி பெற்ற, புனித  தெரசம்மாள் ஆலயத்தில் கடந்த, 11ல் கொடி யேற்றத்துடன் தேர்த் திருவிழா  துவங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் மாலை ஆலயத்தில், ஜெபமாலை, திருப்பலி  போன்றவை நடத்தப்பட்டன. நேற்றிரவு (அக்., 20ல்), 7:00 மணிக்கு, தேர்த் திருவிழா துவங்கியது. இதில், பங்கு தந்தை செபாஸ்டின் துரை மற்றும் பங்கு மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இன்று (அக்., 21ல்) காலை, 5:40 மணிக்கு ஜெபமாலை, 6:00 மணிக்கு நன்கொடையாளர்களுக்கு சிறப்பு திருப்பலி, அதை தொடர்ந்து கொடியிறக்கம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !