கோவில்களில் கட்டணம் வசூலிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கம்!
ADDED :5038 days ago
பண்ருட்டி : பண்ருட்டி திருவதிகையில் இந்து முன்னணி சார்பில் கோவில்களில் பக்தர்களிடம் கட்டணம் என்கிற பெயரில் பணம் வசூலிக்கக் கூடாது என வலியுறுத்தி ஒரு கோடி கையெழுத்து இயக்கம் துவங்கியது. இந்து முன்னணி சார்பில் இந்து கோவில்களில் பக்தர்களிடம் கட்டணம் என்கிற பெயரில் பணம் வசூலிக்கக் கூடாது. பிற மதத்தினர் வழிபடும் இடங்களையும், அதன் சொத்துக்களையும் அந்த மதத்தினரே நிர்வகிப்பது போல் இந்து கோவில்களையும் இந்து பக்தர்களிடமே ஒப்படைக்க வலியுறுத்தியும் பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் அருகே ஒரு கோடி கையெழுத்து இயக்கம் துவங்கியது. இதில் மாவட்ட இந்து முன்னணி செயலர் குமார் தலைமையில் ஒன்றிய தலைவர் ராமசாமி, நகர தலைவர் ரவீந்திரன், செயலர் பாக்கியராஜ், வெங்கடேசன், ஒன்றிய செயலர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.