கோத்தகிரி கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை
ADDED :2140 days ago
கோத்தகிரி:கோத்தகிரியில் கோவில்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நேற்று 28ம் தேதி நடந்த சிறப்பு பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.தீபாவளியை முன்னிட்டு, கோத்தகிரி பஜார் மாரியம்மன் கோவில், கடைவீதி பண்ணாரியம்மன் கோவில், சக்திமலை, தேன்மலை முருகன் கோவில்களில், நேற்று அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும், நட்டகல், காத்துக்குளி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. அதிகாலை முதல் கோவில்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை சுர்ஜித் உயிருடன், பத்திரமாக மீட்க, பிரார்த்தனை நடத்தப்பட்டது