சொத்து இருந்தால்....
ADDED :2254 days ago
மனிதர்கள் சில நேரங்களில் வாரிசு, உறவினர் மீதுள்ள அதிருப்தியால் தன் சொத்துக்களை அவர்கள் யாரும் எடுக்கக் கூடாது என மரண சாசனம் எழுதுகின்றனர். ஆனால், இப்படி செய்வது நல்லதல்ல. சொத்தில் வாரிசுக்கு பங்கு கொடுத்தாக வேண்டும். இந்த விஷயம் குறித்து, “எச்சரிக்கை! மரண சாசனத்தின் மூலம் வாரிசுகளுக்கு யாரும் நட்டம் ஏற்படுத்தக் கூடாது என்பது இறைவனின் கட்டளை. இறைவனுக்கு அடிபணிந்து வாழ்ந்திருந்தாலும் கூட இதை மீறுபவர்கள் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் நரகம் செல்ல நேரிடும்” என்கிறார் நாயகம். இதை ஏற்று நடப்பவர்கள் அருவிகள் பாயும் சுவனத்தோட்டத்தில் வசிக்கும் பாக்கியம் அடைவர்.