தாய் சொல்லை தட்டாதவர்
ADDED :2272 days ago
அன்றாட உணவுக்கே போராடியவர் ஜான் போஸ்கோ. ஆடு, மாடு மேய்க்கும் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். கல்வி கற்பதில் ஆர்வம் கொண்டு, தன் உழைப்பால் கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை சேமித்து குரு மடத்தில் சேர்ந்தார். அங்குள்ள மாணவர்கள் அணியும் வெள்ளை நிற அங்கியுடன் வந்த போஸ்கோவை கண்ட தாய் அழுதாள்.