உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னுார் குமரன்குன்று கோவிலில் கந்தசஷ்டி விழா துவக்கம்

அன்னுார் குமரன்குன்று கோவிலில் கந்தசஷ்டி விழா துவக்கம்

அன்னுார் : குமரன்குன்று, கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா துவங்கியது.

கடந்த 28ம் தேதி காலையில், காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி விழா துவங்கியது. நேற்று முன்தினம் 29ம் தேதி காலை 9:30 மணிக்கு அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது.

மாலை 6:30 மணிக்கு, அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. வரும், 1ம் தேதி வரை, தினமும் காலை மற்றும் மாலையில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.வரும், நவ., 2ம் தேதி, காலை 9:30 மணிக்கு, நாம ஜபம், கலச பூஜை, அபிஷேக ஆராதனை நடக்கிறது. மதியம் 3:00 மணிக்கு, கல்யாண சுப்பிரமணியசுவாமி கிரிவலம் வருதலும், சூரசம்ஹாரமும் நடக்கிறது. இரவு துவங்கி, 3ம் தேதி அதிகாலை வரை குமரன்குன்று குழுவின் பஜனை நடக்கிறது. 3ம் தேதி காலை 8;00 மணிக்கு, சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !