உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றக்குடியில் சூரசம்ஹாரம்

குன்றக்குடியில் சூரசம்ஹாரம்

 காரைக்குடி,குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயில் சஷ்டி விழா கடந்த 28-ம் தேதி லட்சார்ச்சனையுடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.


பல்வேறு அபிேஷகம், அலங்காரம் நடந்தது.முக்கிய நிகழ்ச்சியான  சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. மதியம் 1:30 மணிக்கு மலையிலிருந்து வேல் இறங்கும் நிகழ்ச்சியும், மாலை 4:00 மணிக்கு சண்முகநாத பெருமான் எழுந்தருளல் நிகழ்ச்சியும், அன்னை சக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து வேலுடன் சண்முகநாத  பெருமான் நான்கு ரத வீதியில் வீதி உலா வந்தார். 6:30 மணிக்கு சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து வேலுக்கு அபிேஷகம் செய்யப்பட்டது. சூரசம்ஹாரம் முடிந்து சுவாமி மலைக்கு சென்ற பின் இரவு 8:00 மணிக்கு இளநீர், பால்,  பஞ்சாமிர்தம், திரவியம், விபூதி, பன்னீர், தயிர், அபிேஷகம் நடந்தது. இன்று இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாணமும், சுவாமி தங்கரதத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை பொன்னம்பல அடிகள் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !