உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னையில் சூரசம்ஹார விழா கோலாகலம்

சென்னையில் சூரசம்ஹார விழா கோலாகலம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், சூரசம்ஹார விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. கந்த சஷ்டி என்பது, முருகப் பெருமான், சூரபத்மன் எனும் அரக்கனை வதம் செய்து, அரவணைத்துக் கொண்ட நாள். கந்த சஷ்டியின் பிரதான  நாளான, சூரசம்ஹாரம், நேற்று கோலாகலமாக நடந்தது. 


வடபழநி ஆண்டவர் கோவிலில், அக்., 27ம் தேதி துவங்கிய கந்த சஷ்டி விழாவில், நேற்று காலை, உச்சி காலத்துடன் லட்சார்ச்சனை நிறைவு பெற்றது. அரங்கேறியதுநேற்று மாலை, அம்பாளிடம் வேல் பெற்று,  சூரபத்மனை வதம் செய்ய, முருகப் பெருமான் புறப்பட்டார். இரவு, 7:00 மணிக்கு, சூரசம்ஹாரம் துவங்கியது. முருகப் பெருமான் படை சூழ, யானை, சிங்கம், ஆடு உள்ளிட்ட ரூபங்களில் வந்த சூரபத்மனை, வேலால் வதம் செய்யும் காட்சி அரங்கேறியது.பின், மாமரமாக  மாறிய சூரன், அதை பிளந்தபோது, சேவல், மயிலாக மாறிய காட்சி நடந்தது. இந்த வைபவத்தில் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள், அரோகரா கோஷமிட்டனர். இன்று இரவு, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. நாளை முதல், 7ம் தேதி வரை சுவாமி வீதி புறப்பாடு  நடக்கிறது.


அறுபடை வீடு முருகன்பெசன்ட் நகர், கலாஷேத்ரா காலனியில் அமைந்துள்ள, அறுபடை வீடு முருகன் கோவிலில், சூரசம்ஹார விழாவான நேற்று காலை, அனைத்து சன்னதிகளிலும் விசேஷ அபிஷேக, அலங்காரம் நடந்தது.தொடர்ந்து, வேல் மாறல் பாராயணம்  நடந்தது. நேற்று மாலை, 4:00 மணிக்கு, முருகப் பெருமான் அலங்காரத்துடன், அம்பாளிடம் வேல் பெற்று, வதத்திற்கு புறப்பட்டார். பின், சூரசம்ஹார விழா நடந்தது. இரவு, முருகப் பெருமான், வெள்ளி மயில் வாகனத்தில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  மாடம்பாக்கம், தேனுபுரீஸ்வரர் கோவில், கந்தக்கோட்டம், கந்தாஸ்ரமம், குன்றத்துார், வல்லக்கோட்டை, திருப்போரூர் ஆகிய கோவில்களிலும், சூரசம்ஹர விழா விமரிசையாக நடந்தது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !