வடபழநி ஆண்டவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :2209 days ago
சென்னை: சென்னை, வடபழனி ஆண்டவர் கோவிலில், கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
வடபழநி ஆண்டவர் கோவிலில் கந்த சஷ்டி விழா அக்., 27ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 2ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து நேற்று இரவு, திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிதனம் செய்தனர். 7ம் தேதி வரை சுவாமி வீதி புறப்பாடு நடக்கிறது.