திருத்தணி முருகன் கோவிலில் திருக்கல்யாணம்
ADDED :2209 days ago
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கந்த சஷ்டி நிறைவு விழாவையொட்டி, கல்யாண உற்சவர் பெருமானுக்கு திருக்கல்யாணம் நேற்று நடந்தது.
திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருத்தணி முருகன் கோவிலில், கந்த சஷ்டி மற்றும் லட்சார்ச்சனை விழா, கடந்த மாதம், 28ம் தேதி துவங்கியது.விழாவை ஒட்டி, தினமும் காலை, 8:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப் பெருமானுக்கு லட்சார்ச்சனை மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது.நேற்று முன்தினம் மாலை, உற்சவர் சண்முகப் பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நடந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு காவடி மண்டபத்தில், கல்யாண உற்சவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, முருகப் பெருமானை தரிசித்தனர்.