திருமலைக்கேணியில் திருக்கல்யாணம்
நத்தம்: நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது.
கடந்த அக்.28 அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து சிவபூஜை காட்சி, சிவ உபதேசம், அருணகிரியாருக்கு நடனக் காட்சி, வேல் வாங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. முன்தினம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று காலை மூலவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து மணக்கோலத்தில் எழுந்தருளிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்கள் சுவாமிக்கு வேட்டி, சேலை, பழத்தட்டு உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வழங்கினர். இதையடுத்து ஊஞ்சல் உற்சவம் நடந்தது. கோயில் மண்டபத்தில் அன்னதானம் நடந்தது. சுற்று பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.