மீனாட்சி அம்மன் கோயிலில் பாலாடை நைவேத்யம்
ADDED :2209 days ago
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கந்த சஷ்டி நிறைவு விழாவை முன்னிட்டு முத்துக்குமார சுவாமிக்கு வெள்ளிகவசம், பாலாடை நைவேத்யம் (தயிர் சாதம்), சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சண்முகார்ச்சனை நடந்தது.
ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்தனர். மாநகராட்சி பூங்காமுருகன் கோவிலில் சஷ்டி மண்டபத்தில் ஏராளமான பக்தர்கள் தங்கியிருந்து விரதம் இருந்தனர். நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நடந்தது. விழா நிறைவை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம், அன்னதானம் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் விசாகன், நிர்வாக அலுவலர் மணி, ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., கனிம வள உறுப்பினர் ரவீந்திரன் கலந்து கொண்டனர்.