புதுச்சேரி முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம்
புதுச்சேரி: கந்தசஷ்டி விழாவை தொடர்ந்து, புதுச்சேரி முருகன் கோவில்களில் நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
புதுச்சேரி முருகன் கோவில்களில் நேற்று முன்தினம் சூரம்ஹார விழா நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று வள்ளி தெய்வானை உடனுறை சுப்ரமணியருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று, லாஸ்பேட்டை சிவ சுப்ரமணிய சுவாமி கோவில், சாரம் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில், சுப்பையா சாலை ரயில் நிலையம் எதிரில் அமைந்துள்ள கவுசிக பாலசுப்ரமணிய சுவாமி கோவில், பெத்துசெட்டிப்பேட்டை சித்தி விநாயகர் சிவசுப்ரமணியர் கோவில், முதலியார்பேட்டை முத்துகுமாரசாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களில் நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது.வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணியர் சாமி மணக்கோலத்தில் எழுந்தருள செய்யப்பட்டு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.