அத்திமர ஹயக்ரீவருக்கு வித்யா யாகம்
ADDED :2209 days ago
சேலம்: சேலம், பட்டைக்கோவில் அருகேவுள்ள கிருஷ்ணர் கோவிலில், அத்திமரத்தால் செய்யப்பட்ட, ஹம்ச வாகன ஹயக்ரீவர் சிலை, கடந்த செப்., 16ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
தொடர்ந்து நடந்த, 48 நாள் மண்டல பூஜை நிறைவடைந்தது. இதையொட்டி, நேற்று காலை, கல்வி கடவுளான ஹயக்ரீவருக்கு, வித்யா யாகம், மக்களை டெங்கு காய்ச்சலிலிருந்து காக்க, தன்வந்திரி மகா யாகம் நடந்தது. யாகத்தில் வைத்து பூஜித்த கலசங்களிலிருந்த புனிதநீர், அத்திமர ஹயக்ரீவருக்கு தெளிக்கப்பட்டது. மேலும், யாக பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பின், அன்னதானம் வழங்கப்பட்டது. அத்திமரத்தாலான ஹயக்ரீவர் சிலை, இங்கு மட்டுமே உள்ளது.