உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / போத்தனுார் அரவான் திருவிழா: 12ல் துவக்கம்

போத்தனுார் அரவான் திருவிழா: 12ல் துவக்கம்

போத்தனுார்:குறிச்சி அரவான் திருவிழா வரும், 12ல் ஊர் எல்லை கட்டுதல்,  கம்பம் நட்டுத லுடன் துவங்குகிறது; 22ல் நிறைவடைகிறது.குறிச்சி  கிராமத்துக்குட்பட்ட அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்கும், ஒற்றுமை  விழாதான் அரவான் திருவிழா. வரும், 12ல் குறிச்சி முதுப்பார் கோவிலில் பூஜை  முடித்து, ஊர் எல்லை கட்டுதல், அரவானுக்கு உயிர் பிடித்தல், கம்பம் நட்டு  பூசாத்துதலுடன் துவங்குகிறது.

தொடர்ந்து, 18 வரை தினமும் இரவு, 7:30 மணிக்கு அரவான் சிறப்பு பூஜை நடக்கிறது. 19ம் தேதி இரவு, பெருமாள் கோவிலில் அரவான், அனுமார் சுவாமிகள் கட்டுதலும், 20ம் தேதி காலை, 6:00 மணிக்கு, அரவான் அலங்கரிக்கப்பட்டு உருமால் கட்டும் சீர் முடிந்து, பெருமாள் கோவிலில் இருந்து அரவான் எழுந்தருளுதலும் நடக்கின்றன.22ம் தேதி காலை, 6:30 மணிக்கு பிள்ளைமார் சமூக பூஜையும் தொடர்ந்து தேவேந்திர குல வேளாளர் சமூக பூஜையும் நடக்கின்றன.

இதையடுத்து, அரவான் திருவீதி உலா புறப்படுதல் நடக்கிறது.இதில், கற்பூர உப்பிலிய நாயக் கர், சேர்வைக்காரர், ரவுண்டு ரோடு தேவர், பொள்ளாச்சி ரோடு பொதுமக்கள், தேவர் சமூகம், முருகா நகர் பொதுமக்கள், சுந்தராபுரம் கோனார் சமூகம், போயர் சமூகம், குறிச்சி போயர் சமூகம், பூசாரி வீதி வள்ளுவர் சமூக பூஜைகளும் நடக்கின்றன.

இறுதியாக, தேவேந்திர குல வேளாளர் சமூக மேடையில், அனைத்து சமூக  பெரியதனக்கார ர்கள் முன்னிலையில், களப்பலியுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !