சோழவந்தான் பத்ரகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :2234 days ago
சோழவந்தான்:சோழவந்தான் நாடார் தெரு பத்ரகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
கருப்பணசாமிக்கு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிவாச்சார்யார் பரசுராம் தலைமையில் நவ., 8 கணபதி ஹோமம், முதல் கால பூஜை துவங்கியது. நேற்று (நவம்., 10ல்)காலை நான்காம் கால யாக பூஜையை தொடர்ந்து புனிதநீரை கோபுரகலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.
அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் செய்தனர்.