பேச்சாளராக பேச்சியை வணங்குங்க!
ADDED :2126 days ago
புராணக்கடவுளர்களுக்கும் சிறுதெய்வங்களுக்கும் நிறைய தொடர்பு உண்டு. கிராமப்பகுதிகளில் பலவிதமான பெண் தெய்வ வழிபாடு உண்டு. இதில் முப்பெரும் தேவியராகப் போற்றப்படும் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி மூவருமே வேறுபெயர்களில் இடம்பெற்றுள்ளனர். கல்விக் கடவுளாகிய சரஸ்வதிக்கு நாமகள், வாக்தேவி, கலைமகள் என்று பெயர்கள் உண்டு. நாமகள் என்பதற்கு நம் நாவில் உறைந்திருப்பவள் என்று பொருள் கூறுவர். நாமகளே நாட்டுப்புற தெய்வங்களில் பேச்சியம்மனாக விளங்குகிறாள். பேச்சாளர்களைப் பாராட்டும் போது, ‘ஆகா! இவர் முத்து முத்தாப் பேசுபவர்’ என்று பெருமையாகச் சொல்வர். பேச்சியம்மனையும் ‘முத்துப்பேச்சி’ என்று சொல்வர். பேச்சுக்கலை மற்றும் கல்வியில் சிறக்க விரும்புபவர்கள் பேச்சியம்மனை வழிபடுவது நன்மை தரும்.