உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யப்ப தர்ம பிரசார ரதம்: பக்தர்கள் தரிசனம்

அய்யப்ப தர்ம பிரசார ரதம்: பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தின் முக்கிய நகரில் வலம் வந்த, அய்யப்ப தர்ம பிரசார ரதத்தை, பக்தர்கள் தரிசித்தனர். கேரளா அய்யப்பன் கோவில் வடிவில் அமைக்கப்பட்ட, அய்யப்ப தர்ம பிரசார ரதம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து, செப்டம்பர், 17ம் தேதி புறப்பட்டது. பல்வேறு ஊர்கள் வழியாக, நேற்று முன்தினம் இரவு, காஞ்சிபுரம் வந்த இந்த ரதம், நேற்று காலை, சங்கர மடத்தில் இருந்து புறப்பட்டது.

நகரின் முக்கிய இடங்களான செவிலிமேடு, பூக்கடைசத்திரம், சித்திரகுப்தர் கோவில், வழக்கறுத்தீஸ்வர் கோவில், பங்காரம்மன் தெரு, பணாமுடீஸ்வரர் கோவில், ரங்கசாமிகுளம் ஆகிய பகுதிகளில், பக்தர்கள் தரிசனத்தினர். தொடர்ந்து, வாலாஜாபாத், உத்திரமேரூர், மதுராந்தகம், திருக்கழுகுன்றம், திருப்போரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய பகுதிகளுக்கு சென்று, அடுத்த மாதம், 10ம் தேதி, காஞ்சிபுரம் வந்தடையும். பின், இங்கிருந்து கேரளா கிளம்புகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !