உள்ளூர் செய்திகள்

விருந்து

பணக்காரர் ஒருவர் தனக்கு தெரிந்தவர்களுக்கு விருந்து கொடுக்க நினைத்து வேலைக்காரர் மூலம் அழைப்பு விடுத்தார். அதில் ஒருவர் 'வயலில் வேலை இருக்கிறது. வர இயலாது'' எனச் சொன்னார். இன்னொருவர் 'புதிய மாடுகள் வாங்கியுள்ளேன். நிலத்தை அது சரியாக உழுகிறதா என பார்க்க வேண்டும். எனவே வர வாய்ப்பில்லை'என்றும், வேறொருவர், “என் மகன் திருமணமாகி இப்போது தான் ஊருக்கு வருகிறான். அதனால் வர இயலாது,” என ஆளுக்கு ஒரு காரணத்தை சொன்னார்கள். இதை அறிந்த பணக்காரர், இவர்களை அழைத்ததே தப்பு. என்னை அவமானப்படுத்தி விட்டார்களே என புலம்பினார். நீ ஏழைகளையும், மாற்றுத்திறனாளிகளையும் கூட்டி வா. அவர்கள் சாப்பிடட்டும்' என்றார். யார் சாப்பிட வேண்டும் என அரிசி முளையிடும் போதே அதன் மீது எழுதப்பட்டுள்ளது.