நலமுடன் வாழ்க
UPDATED : பிப் 05, 2025 | ADDED : பிப் 05, 2025
ஈவான்ஸ் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி. ஒரு நாள் பைபிளை படித்த போது ''நாளை உன் வீட்டிற்கு வருகிறேன்'' என ஆண்டவரின் குரல் கேட்டது. மறுநாள் ஆண்டவரை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அப்போது முதியவர் ஒருவர் காலில் செருப்பு இல்லாமல் வெயிலில் நடப்பதைக் கண்டார் ஈவான்ஸ். அவருக்கு தன்னிடம் இருந்த செருப்புகளை அன்பளிப்பாக கொடுத்தார். சற்று நேரத்தில் இரண்டு சிறுவர்கள் தெருவில் சண்டையிட்டபடி சென்றனர். அவர்களிடம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என அறிவுரை கூறி சாப்பிட ஆப்பிள் கொடுத்தார். மாலை நேரத்தில் கிழிந்த ஆடையுடன் வந்த பெண்ணுக்கு உடையும், பசி போக்க ரொட்டியும் கொடுத்தார். இருட்டத் தொடங்கியது. ஆண்டவர் குரல் கொடுத்தார். ''அன்பனே... மூன்று முறை நான் வந்த போதும் அன்பாக உபசரித்தாய். நலமுடன் வாழ்க'' என்றார்.