மாறியது மனம்
UPDATED : பிப் 13, 2025 | ADDED : பிப் 13, 2025
ஜெர்மனியைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் ஷ்வைட்ஸர். இசைக்கலைஞர், மதபோதகர், மருத்துவர், என பன்முகம் கொண்ட இவரை ஆண்டவரின் வடிவமாக கருதினர். சிறுவயதில் ஒருநாள் குதிரை மீது சவாரி சென்றார். நண்பர்களின் மத்தியில் திறமையை காட்டுவதற்காக குதிரையை சாட்டையால் அடிக்க, அது அசுர வேகத்தில் ஓடியது. ஆல்பர்ட் இறங்கியதும் குதிரை சோர்ந்து விழுந்தது. அதைக் கண்டு வேதனைப்பட்டார். மற்றொரு சந்தர்ப்பத்தில் குதிரை வண்டியில் இவர் சென்ற போது, நாய் ஒன்று குதிரையின் மீது பாய்ந்தது. அதை தடுக்க எண்ணி சவுக்கால் நாயை அடிக்க முயன்றார். தவறுதலாக குதிரையின் கண்ணில் பட்டதால் ரத்தம் கொட்டியது. இந்த நிகழ்வுகளுக்குப் பின் இரக்கம் மிக்கவராக மாறினார். இனி எந்த உயிருக்கும் தீங்கு செய்வதில்லை என சிறுவயதிலேயே முடிவு செய்தார்.