விஞ்ஞானியின் கணிப்பு
UPDATED : மார் 07, 2025 | ADDED : மார் 07, 2025
விஞ்ஞானி ஐன்ஸ்டீனிடம், 'மூன்றாவது உலகப்போர் உருவானால் எந்த வகையான ஆயுதங்கள் பயன்படுத்தப்படும்' எனக் கேட்டார் நிருபர். அதற்கு அவரோ, ''அது பற்றி எனக்கு தெரியாது. நான்காவது உலகப்போரில் ஈடுபடுபவர்கள் எதைப் பயன்படுத்துவார்கள் என எனக்கு தெரியும்'' என்றார். நிருபருக்கு ஆர்வம் மேலிட, ''அதையாவது சொல்லுங்கள்'' என கேட்டார். ''கற்காலம் போல கல்லையும், வேலையும் ஆயுதமாக பயன்படுத்துவார்கள். ஏன் என்றால் அணு ஆயுதங்களின் தாக்கத்தால் உலகில் பேரழிவு ஏற்படும். அதன் பின் மீண்டும் மனிதனாக வாழ ஆரம்பித்து விடுவான்'' என்றார் விஞ்ஞானி.