உள்ளூர் செய்திகள்

உடனடி பலன்

ஆண்டவரின் அடியவளான 'எலியா' மக்களுக்கு தொண்டு செய்வதில் வாழ்நாளைக் கழித்தாள். ஒருமுறை பஞ்சம் ஏற்பட்ட போது பரமபிதாவிடம் வேண்டி மழையை வரவழைத்தாள். இந்த சம்பவத்தை பாதிரியார் ஒருவர் சர்ச்சில் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். அப்போது மழை வந்தது. அங்கு கூடியிருந்த மக்கள் ஆச்சரியப்பட்டனர். இதையெல்லாம் கண்ட பாதிரியாரின் மகன், 'மழை வர வேண்டும் என எலியாவின் கதையை அப்பா சொன்னாரா... இல்லை தற்செயலாக மழை பெய்ததா... இல்லை சொற்பொழிவைக் கேட்டு ஆண்டவரே மழை பெய்யச் செய்தாரா' என தன் தாயிடம் கேட்டான்.விசுவாசமான செயலுக்கான பலன் உடனடியாக கிடைக்கும் என்றாள்.