காலத்தின் கையில்...
UPDATED : ஜூன் 05, 2025 | ADDED : ஜூன் 05, 2025
பாதிரியார் ஒருவர் ஒரு கிராமத்தின் வழியாக சென்றார். மக்கள் அனைவரும் சந்தோஷமாக இருந்தனர். அதற்கான காரணத்தை கேட்ட போது, கிராமத்தின் தலைவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்றனர். ஊராருக்கு அவர் விருந்தளிக்க இருப்பதாக தெரிவித்தனர்.இருபது ஆண்டுகள் கழித்து ஒருமுறை அதே கிராமத்திற்கு வந்தார் பாதிரியார். மக்கள் அனைவரும் கவலையுடன் இருந்தனர். காரணம் கேட்ட போது, வீட்டில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு தலைவரின் மகன் தலைமறைவாகி விட்டான். ஒரு மாதம் கடந்து விட்டது. அந்த வருத்தத்தில் தலைவர் படுத்த படுக்கையாகி விட்டார். எல்லாம் நம் கையில் இல்லை. காலத்தின் கையில் இருக்கிறது என்றார் பாதிரியார்.