பணம் யாருக்கு
UPDATED : ஜூலை 03, 2025 | ADDED : ஜூலை 03, 2025
கோபக்காரனான பவுலும், பொறுமைசாலியான ஜானும் சகோதரர்கள். கட்டட தொழிலாளர்களான இருவரும் அவசர தேவைக்காக நிதிநிறுவனம் ஒன்றில் பணம் கேட்டனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவருக்கு ஒரே நேரத்தில் கடன் கொடுக்க முடியாது. இருவருக்கும் ஓராண்டாவது இடைவெளி இருக்க வேண்டும் என விதிமுறை இருந்ததால் களப்பணியாளரை அனுப்பினார் நிறுவனத்தின் மேலாளர். வெயிலில் வேலை செய்து கொண்டிருந்த பவுலைக் கண்ட பணியாளர், 'என்ன செய்கிறீர்கள்' எனக் கேட்டார். அதற்கு 'செங்கல்லை சுமக்கிறேன் தெரியலையா' என எரிச்சலுடன் சொன்னான் பவுல். சற்று தொலைவில் நின்ற தம்பியிடம் அதே கேள்வியைக் கேட்டார். 'கட்டட வேலை செய்கிறேன் ஐயா' என பணிவுடன் சொன்னான் ஜான். அவனுக்கே பணம் கிடைத்தது. அமைதியும், பணிவும் ஒருவரை வாழ வைக்கும்.