மனதில் உறுதி
UPDATED : செப் 19, 2025 | ADDED : செப் 19, 2025
எண் கணிதத்தின் தந்தையாகவும், தத்துவ ஞானியாகவும் திகழ்பவர் பிதாகரஸ். குருகுலத்தில் பயிலும் போது அவரது ஆசிரியர், 40 நாட்கள் இயற்கை உணவுகளை சாப்பிடு; அதன் பின் வகுப்புக்கு வா'' என நிபந்தனை விதித்தார். அதை ஏற்றுக் கொண்டார் பிதாகரஸ்.இவரால் கண்டுபிடிக்கப்பட்ட தத்துவக் கோட்பாடுகளை கிரேக்க மன்னர் பலிக்கிரட்டீஸ் புறக்கணித்தார். 'தேச துரோகி' என பட்டம் கொடுத்ததோடு நாட்டை விட்டும் வெளியேற்றினார். ஆனாலும் மனதில் உறுதி கொண்ட பிதாகரஸ், தன் கோட்பாடுகளை பரப்ப சீடர்களை உருவாக்கினார். அவர்களும் 'பிதாகரஸ் மன்றம்' என்னும் அமைப்பை உருவாக்கி கோட்பாடுகளைப் பரப்பினர்.