நல்லவராக வாழுங்கள்
UPDATED : செப் 19, 2025 | ADDED : செப் 19, 2025
ஒரு இளம்பெண்ணின் சோக கதையைக் கேளுங்கள். அவள் நேசித்த வாலிபன் ஒருவன், '' எனக்காகக் காத்திரு. நான் வெளிநாட்டுக்கு சென்று வந்ததும் உன்னை திருமணம் செய்வேன்'' என வாக்களித்து புறப்பட்டான். அப்பெண்ணும் உண்மை என நம்பி காத்திருந்தாள். பத்தாண்டுக்குப் பிறகு இளைஞன் தாய் நாட்டுக்கு திரும்பினான். எப்படி தெரியுமா? வேறொரு பெண்ணை மணந்த அவன் இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையாகி விட்டான். இதையறிந்த இளம்பெண்ணின் இதயம் உடைந்தது. மனநிலை பாதிக்கப்பட்டு பைத்தியமானாள். எவ்வளவு பெரிய கொடுமை பார்த்தீர்களா? நற்பண்பு இல்லாததால் நேர்ந்த முடிவு இது. தாவீது ராஜா சொல்வது போல, '' திடமனதுடன் இருங்கள். அவர் உங்கள் இதயத்தை ஸ்திரப்படுத்துவார்'' என்பதை சிந்திப்போம். உங்களுக்காக மட்டுமின்றி மற்றவருக்காகவும் திடமான மனதுடன் நல்லவராக வாழுங்கள்.