உள்ளூர் செய்திகள்

அருளைத் தேடு

கிரீடம் செய்ய கொடுத்த தங்கத்தை முழுமையாக பொற்கொல்லர் பயன்படுத்தினாரா என அறிய விரும்பினார் மன்னர் ஒருவர். அதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை விஞ்ஞானி ஆர்க்கிமிடீஸிடம் ஒப்படைத்தார். எப்படி கண்டுபிடிப்பது என யோசித்தபடி தண்ணீர் தொட்டியில் குளிக்கச் சென்றார் விஞ்ஞானி. தண்ணீருக்குள் மூழ்கியதும் அதில் இருந்து தண்ணீர் வெளியேறியது. நீரில் ஒருவர் மூழ்கும் போது, வெளியேறும் நீரின் எடை, மூழ்குபவரின் எடைக்கு சமமாக இருக்கும். இந்த அடிப்படையில் கிரீடத்தில் இருக்கும் தங்கத்தின் எடையைக் கண்டறியலாம் என யூகித்தார். 'கண்டு கொண்டேன்! கண்டு கொண்டேன்' என துள்ளியபடி தெருவில் ஆடையின்றி ஓடினார். எதிரே வந்த முதியவர் ஒருவர் மன்னரை திருப்திப்படுத்த வழியை கண்டுபிடித்தாய். ஆனால் விண்ணுலகில் உள்ள ஆண்டவரை எப்போது திருப்திப்படுத்த போகிறாய்'' எனக் கேட்டார். வாழும் போதே அருளைத் தேடுவது அவசியம்.