உள்ளூர் செய்திகள்

அதிசயம்

இரண்டாவது உலகப்போர் நடந்து கொண்டிருந்தது. அப்போது ரஷ்ய வீரர் ஒருவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். எதிரி நாட்டினரின் குண்டு மழையால் அவரது ஊரும் சுடுகாடாக மாறி இருந்தது. அப்போது சடலங்களை ஒரே கல்லறையில் அடக்கம் செய்ய மக்கள் தயாராகிக் கொண்டிருந்தனர். தன் மனைவிக்கு திருமணப் பரிசாக விலை உயர்ந்த செருப்பு ஒன்றை அந்த வீரர் முன்பே அனுப்பி இருந்தார். அந்த செருப்பு ஒரு பெண்ணின் காலில் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த பெண் வேறு யாருமல்ல. அவரது மனைவி. அவளைக் கட்டிப் பிடித்து அழுத போது, லேசாக மூச்சு விடுவதைக் கண்டு கொண்டார். உடனடியாக அவளுக்கு சிகிச்சை செய்தனர். அவளும் உயிர் பிழைத்தாள். சில ஆண்டுக்கு பிறகு அவள் கருவுற்றாள். அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை வேறு யாருமில்லை. தற்போது ரஷ்ய அதிபரான விளாடிமிர் புடின். ஆண்டவர் நினைத்தால் அதிசயம் நடக்கும்.