உள்ளூர் செய்திகள்

வெற்றியாளர் யார்

கல்வியாளர் சார்லஸிடம் பலரும் ஆலோசனை கேட்பர். அவரது நண்பர் ஒருவர், ''வெள்ளி, தாமிரத்தில் மதிப்பு மிக்கது எது என உன் மகன் ஸ்டீபனிடம் கேட்டேன். அவன் தாமிரம் என பதிலளித்தான்'' என்றார். மகனிடம் விளக்கம் கேட்டார் தந்தை. அதற்கு, '' அப்பா... பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒருவரைச் சந்தித்தேன். அவர் வெள்ளி, தாமிர நாணயங்களை காட்டி இதில் மதிப்பு மிக்கதை எடுத்துக் கொள்' என்றார். ''நான் தாமிரத்தை எடுத்தேன். என்னைப் பார்த்து அவர் நையாண்டியாகச் சிரித்தார். இப்படியே பலமுறை நடந்ததால் என்னிடம் சில நாணயங்கள் சேர்ந்தன. வெள்ளி எனச் சொல்லி இருந்தால் இந்த விளையாட்டு எப்போதோ நின்றிருக்கும்'' என்றான்.மேலும் அவன், ''மற்றவர் நம்மை பார்த்து மகிழ்வதற்காக பல சமயங்களில் முட்டாளாக வேஷமிடுகிறோம். ஆனால் எதிராளிகளோ தங்களை வெற்றியாளராகவும், மற்றவரை முட்டாளாகவும் கருதுகிறார்கள். வெற்றி, தோல்வி என்பது மனநிலை சார்ந்தது. அதை தீர்மானிக்கும் உரிமை அவரவருக்கே உண்டு. என்னைப் பொறுத்தவரை நானே வெற்றியாளர்'' என்றான் ஸ்டீபன்.