தவறுகளை மன்னியுங்கள்
UPDATED : ஜன 05, 2024 | ADDED : ஜன 05, 2024
டேவிட் என்பவர் அறிஞர் ஒருவரை பார்க்கச் சென்றார். அவரிடம் பக்கத்து வீட்டில் இருக்கும் பயில்வான், தேவையில்லாமல் என்னைத் திட்டுகிறார். நானும் அவரை திட்ட வேண்டும் ஐடியா ஒன்று சொல்லுங்கள் என்றார். எப்படியெல்லாம் திட்ட வேண்டும் என நினைக்கிறீரோ அதன்படியே ஒரு கடிதத்தில் எழுதிக்கொண்டு வாரும் என்றார் அறிஞர். அவ்வாறு செய்த டேவிட்டிடம், இப்போது அவர் மீதிருந்த கோபம் குறைந்ததா என அறிஞர் கேட்க, அவரும் ஆம் என சொன்னார். எழுதிய கடிதத்தை கிழித்து விடும். பிறர் தவறுகளை மன்னித்தும், மறந்தும் விடுங்கள் என்கிறது பைபிள்.