உள்ளூர் செய்திகள்

சபாஷ் ரேஷ்மா

படிப்பில் படுசுட்டியாக இருந்தாள் ரேஷ்மா, 'இரக்கம்' பற்றி ஆசிரியர் பாடம் எடுத்த போது உன்னிப்பாக கவனித்தாள். அதை தானும் பின்பற்ற வேண்டும் என நினைத்தாள். தன் வீட்டின் அருகிலுள்ள மரத்தடியில் ஒரு பாத்திரத்தில் குடிநீரை நிரப்பி வைத்தாள். அவ்வழியாக வந்த ஆசிரியரிடம், கோடையில் மக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் வைத்திருப்பதாகச் சொன்னாள். 'சபாஷ் ரேஷ்மா' என வாழ்த்தினார் ஆசிரியர்.