விழிப்பாய் இருங்கள்
UPDATED : ஏப் 09, 2023 | ADDED : ஏப் 09, 2023
கிரேக்க அறிஞர் ஒருவர் தன் பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்த்தார். விருந்து ஒன்றிற்கு செல்ல அவர்கள் அனுமதி கேட்க, தந்தையோ பதில் சொல்ல வில்லை. பொறுமை இழந்த அவர்கள் அன்று முதன் முதலாக கோபப்பட்டனர். கரித்துண்டு ஒன்றை கொடுத்து சட்டைப் பையில் வைத்துக் கொள்ளச் சொன்னார் தந்தை. வாங்கிய அவர்களது கையும், சட்டை பையும் கரியானது. வெளி இடங்களில் நல்லவர் தீயவர் என பலர் கலந்து இருப்பர். கரித்துண்டைப்போல அவர்களது தீயபழக்கமும் எளிதாக நம்மைத்தொற்றிக்கொள்ளும். விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுரை சொல்லி அனுமதி தந்தார். இருவரும் மன்னிப்பு கேட்டனர் .