கருணை உள்ளமே..
அனாதை குழந்தைகளுக்கான விடுதியை விரிபடுத்த எண்ணி, வங்கியில் கடன் கேட்டார் ஒரு விடுதி நிர்வாகி. தனது திட்டத்தை வங்கி அதிகாரியிடம் கூறினார். விடுதி நிர்வாகி கருணை உள்ளம் கொண்டவர்தானா என அறிய விரும்பிய வங்கிஅதிகாரி, ''எனது கண்ணில் எது செயற்கையானது என்று சொல்லுங்கள்'' எனக் கேட்டார்.''உங்கள் வலது கண்'' என்று தயங்காமல் கூறினார். ''பிரமாதம் எப்படி இப்படி...எனக்கு ஆப்பரஷேன் செய்தவருக்கே தற்போது கேட்டால் சரியாக சொல்லத் தெரியாது. நீங்கள் எப்படி சரியாகச் சொன்னீர்கள்'' எனக்கேட்டார்.''இயற்கையான கண்ணில்தான் கனிவை, அன்பை பார்க்கவோ, உணரவோ முடியும். குழந்தைகளின் சிரமத்தை விளக்கும்போது உங்கள் இடதுகண் கலங்கியதைக் கவனித்தேன்'' என்றார் விடுதி நிர்வாகி. அவருக்கு உடனடியாக கடன் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. உண்மையான உள்ளமும், கண்களும் எப்போதும் கனிவையும், அன்பையும் வெளிப்படுத்தும்.